குருஞான சம்மந்தர் பள்ளி 25ம் ஆண்டு விழா
சிதம்பரம்; சிதம்பரம் குருஞான சம்மந்தர் மெட்ரிக் பள்ளி 25 ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளுக்கிடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 40 பள்ளிகளில் இருந்து, 420 மாணவர்கள் பங்கேற்றனர்.விழாவிற்கு, பள்ளி நிர்வாக குழு தலைவர் சுவேதாகுமார் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் சேது சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிதம்பரம் சுழற்சங்க தலைவர் அருண் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பரிசு வழங்கினார். பள்ளி துணை முதல்வர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பள்ளி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.