வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியால் குத்திய 3 பேர் கைது
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பில், பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்து, பணம் கேட்டு கத்தியால் குத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குணசேகரன், 24; இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், சேத்தியாத்தோப்பு ராஜீவ் சிலை அருகே பைக்கில் வந்தார்.அங்கு நின்றிருந்த சென்னிநத்தத்தை சேர்ந்த வெற்றிவேல் மகன் சரவணக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான அள்ளூரை சேர்ந்த கனகராஜ் மகன் கலைமணி, 22; லோகநாதன் மகன் உத்திராபதி, 20; ஆகியோர், குணசேகரனை வழிமறித்து பணம் கேட்டனர். தர மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயமடைந்த குணசேகரன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து சரவணக்குமார், உத்திராபதி, கலைமணி ஆகியோரை கைது செய்தனர்.