மேலும் செய்திகள்
பஸ்-லாரி மோதல் 12 பேர் படுகாயம்
29-Sep-2024
கடலுார்: கைதி வழிக்காவல் பணி முடிந்து திரும்பிய போது, சென்டர் மீடியனில் ஜீப் மோதியதில் 3 போலீசார் காயமடைந்தனர்.காரைக்கால், மேல அன்னவாசலைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; புதுச்சேரி காவல் துறையில் காவலராக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கைதி வழிக்காவல் பணிக்கு ஜீப்பை ஓட்டிச் சென்றார். காவலர் அய்யப்பன், 36; பெண் காவலர் ஆஷா, 27; ஆகியோர் உடன் சென்றனர்.பணி முடிந்து காரைக்கால் திரும்பிக் கொண்டிருந்தனர். கடலுார், முதுநகர் அடுத்த பெரிய காரைக்காடு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சென்டர் மீடியனில் மோதி, சாலையோர மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.மூவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2024