உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவிகளை ஆபாசமாக திட்டிய 3 வாலிபர்கள் கைது

பள்ளி மாணவிகளை ஆபாசமாக திட்டிய 3 வாலிபர்கள் கைது

நெய்வேலி: கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழூர் காலனி வடக்கு தெருவை பகுதி சேர்ந்த பள்ளி மாணவிகள் மூன்று பேர் வடலுாரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று பள்ளி முடித்து கீழூர் அங்காளம்மன் கோவில் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே 2 பைக்கில் வந்த 4 பேர் பள்ளி மாணவ மாணவிகள் மூவரையும் ஆபாசமாக பேசி, அவர்களை சாதிப்பெயரை கூறி திட்டி கேலி செய்துள்ளனர். இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். மாணவிகளின் பெற்றோர் இதுகு றித்து டவுன்ஷிப் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், நால்வர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கீழூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய இருவர் மற்றும் செல்வம் மகன் செந்தில்குமார், 19; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ