உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழை நீரில் மூழ்கி 30 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

மழை நீரில் மூழ்கி 30 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மழை நீர் தேங்கியதால் 30 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வீணாகி விவசாயிகள் வேதனைகள் அடைந்துள்ளனர். வேளக்குடி கிராமத்தில் சம்பா நடவு பணிகள் முடிந்து பயிருக்கு உரம் அடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்தது. இதில், சிதம்பரம் அடுத்துள்ள வேளக்குடி கிராமத்தில் சரியான வடிகால் வசதி இல்லாததால் நாற்றங்கால், நடவு செய்த வயல்களில் மழை தேங்கி நின்றுள்ளது. தண்ணீல் வடியாமல் 3 நாட்களுக்கு மேல் தேங்கி நின்றதால் நடவு செய்த 30 ஏக்கருக்கு மேல் பயிர்கள் அழுகி வீணாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சரியான முறையில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை