பானிபூரி விற்பவரை தாக்கிய 4 பேர் கைது
சிதம்பரம் : சிதம்பரத்தில், பானிபூரி விற்பவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்திரபிரதேச மாநிலம்,குன்னுார், சம்பல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர், தார்ப்பாய்விற்பனை செய்வதற்காக சிதம்பரம் கோவிந்தசாமி, நகரில் 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கினர். அதில் பெரோஸ் என்பவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, நபீஸ் என்பவர் வீட்டிற்கு மாறி சென்று தங்கினார். பாக்கி வாடகையை கொடுக்குமாறு, வீட்டு உரிமையாளர்கள் பிரதீப்குமார் மற்றும் சதீஷ் கேட்டுள்ளனர்.அதற்கு அட்வான்ஸ் தொகையை கழித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பிரதீப்குமார் உள்ளிட்ட 4 பேர், கோவிந்தசாமி நகரில், நபிஸ் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று,நபீசை தாக்கியுள்ளனர்.இது குறித்து, நபீஸ் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, உத்திரபிரதேச மாநிலம், குன்னுார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார், 27; கோவிந்தசாமி நகர் கோபி மகன்சதீஷ், 23; கீழகுண்டலபாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செல்வபாரதி, மாரியப்பா நகர் தங்கதுரை மகன் ஆண்டன்பாலசிங்கராஜ், 19; ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.