உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் 4 பேர் கைது

இருதரப்பு மோதல் 4 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் : முன்விரோத தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளூர் மற்றும் இளங்காம்பூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று இளங்காம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்விரோத தகராறில் தொடர்புடைய 2 சிறுவர்கள் வெள்ளூர் கிராம கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றபோது, இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இருதரப்பினம் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், 7 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெள்ளூரை சேர்ந்த மதன்,19; உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ