உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்பனைக்கு உடந்தை: 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

லாட்டரி விற்பனைக்கு உடந்தை: 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலுார்; கடலுாரில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, தனிப்பிரிவு போலீஸ் உட்பட நான்கு போலீசாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். கடலுாரில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உட்பட நான்கு பேரை, கடலுார் புதுநகர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 22லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு போலீசார் சிலர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கடலுார் புதுநகர் தனிப்பிரிவு போலீஸ் முத்துக்குமரன் மற்றும் தனிப்படை போலீசார் காங்கேயன், மணிகண்டன், தீனதயாளன் ஆகிய நான்கு பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். லாட்டரி விற்பனையில் போலீசாருக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணைக்கும் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி