கார் மீது பஸ் மோதல் 5 பேர் காயம்
நெல்லிக்குப்பம் : கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கடலுாரில் இருந்து நேற்று மாலை பாலுார் வழியாக பண்ருட்டிக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த ஓட்டேரி பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது எதிரில் வந்த கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் உட்பட 5 பேர் லேசான காயமடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து காரணமாக கடலுார்-பண்ருட்டி சாலையில் 5:00 மணி முதல் 5:30 மணி வரை 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.