உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சூதாடிய 6 பேர் கைது 

 சூதாடிய 6 பேர் கைது 

கடலுார்: கடலுாரில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், தேவனாம்பட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குண்டு உப்பலவாடி கரும காரிய கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய கும்பலை பிடித்து விசாரித்தனர். இதில், குண்டு உப்பலவாடி ரகு,42; அப்பு,38; தியாகு,23; வினோத்,30; பாபு, சுந்தரராஜன் ஆகியோரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 1,100 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய குண்டு உப்பலவாடி சுப்ரமணி உட்பட 6 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை