மேலும் செய்திகள்
குடிபோதையில் தகராறு 4 வாலிபர்கள் கைது
04-Nov-2024
நெய்வேலி, : நெய்வேலியில் பணம் கேட்டு தாக்குதல் நடத்திய 6 பேரை டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி அருகே. பொன்னங்குப்பத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 50; இவருக்கு, பக்கத்து ஊரை சேர்ந்த முரளி என்பவர் கொடுக்க வேண்டிய பணத்தை, நெய்வேலி அடுத்த வடக்கிருப்பை சேர்ந்தவர் சக்திவேல், 51. மூலம் கொடுத்தனுப்பினார். ஆனால், பாஸ்கருக்கு பணத்தை தராமல் சக்திவேல் இழுத்தடித்து வந்தார்.ஆத்திரமடைந்த பஸ்கரின் மகன் மோனீஷ், தனது நண்பர்களுடன் சென்று தங்கராசுவிடம் பணம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. அப்போது மோனீஷ் மற்றும அவரது நண்பர்கள் சேர்ந்து சக்திவேலுவை சரமாரியாக தாக்கினர்.சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை தாக்கிய மோனீஷ், 30, வடக்கு மேலுார் மாரியம்மன் கோவில் தெரு கலைச்செல்வன், 28; நீலகண்டன், 26; ராஜதுரை, 27; தோப்புகொல்லை கவியரசன், 24; ரஞ்சித், 26, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
04-Nov-2024