மேலும் செய்திகள்
இருளர் மக்களுக்கு நிவாரண உதவி
13-Dec-2024
கிள்ளை; சிதம்பரம் அருகே பிளஸ் தன்னார்வ நிறுவனம் சார்பில், 6 இருளர் குடும்பத்தினருக்கு, மீன்பிடி படகு மற்றும் வலைகள் வழங்கப்பட்டது.சிதம்பரம் அடுத்த தா.சோ.பேட்டை மேதா பட்கர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் 6 பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு, பிளஸ் தன்னார்வ நிறுவனம் மற்றும் லின்சி அறக்கட்டளை சார்பில், தலா ரூ. 56 ஆயிரம் மதிப்பில் 6 கண்ணா படகு, 3 விதமான மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டது.கடலுார் மாவட்ட மீன் வளத்துறை மண்டல உதவி இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர் ரம்யா லட்சுமி, பிளஸ் தொண்டு நிறுவன செயலர் அந்தோணிசாமி ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில், பிளஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள் இளங்கோவன், ரிச்சர்டு, கிராம தலைவர் மாரியப்பன், ராஜேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
13-Dec-2024