மேலும் செய்திகள்
லாரி டிரைவரை தாக்கியவர் கைது
12-Nov-2026
பரங்கிப்பேட்டை: இடப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புவனகிரி அடுத்த வடக்குத் திட்டை சேர்ந்தவர்கள் பூபதி,57; உத்திராபதி. இவர்களுக்குள் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அதில் காயமடைந்த பூபதி, விஜயா, உமா மகேஸ்வரி, உத்திராபதி ஆகியோர் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, பூபதி மற்றும் உமா மகேஸ்வரி கொடுத்த புகார்களின் பேரில், புவனகிரி போலீசார், இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Nov-2026