உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்கத்தை  முற்றுகையிட முயற்சி 784 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தை  முற்றுகையிட முயற்சி 784 பேர் கைது

மந்தாரக்குப்பம்; வக்ப் திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தை முற்றுகையிட முயன்ற 784 பேரை போலீசார் கைது செய்தனர்.என்.எல்.சி., இரண்டாம் சுரங்க முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி பொதுசெயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ., தலைமையில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தை முற்றுகையிடுவதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை நெய்வேலி போலீசார் தடுத்து கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் 2 வது சுரங்கப் பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 6;00 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை