மேலும் செய்திகள்
சுதந்திரத்தை சுவாசித்து கொடியேற்றி கொண்டாட்டம்
16-Aug-2025
கடலுார், ஆக. 16- கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தேசிய கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் 79வது சுதந்திர தின விழாவிற்காக காலை 9:00 மணிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வருகை தந்தார். அவரை எஸ்.பி., ஜெயக்குமார் வரவேற்று கொடி மேடைக்கு அழைத்து வந்தார். 9:05 மணிக்கு கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின், சமாதானத்தை குறிக்கும் வெண்புறாக்கள் மற்றும் மூவர்ண நிறத்திலான பலுான்களையும் பறக்கவிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், தாட்கோ, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் ஆகியன சார்பில் 118 பயனாளிகளுக்கு 7.09 கோடி ரூபாய் மதிப்பீல் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புவனகிரி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குளோபல் பள்ளி, புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தேவனாம்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பேரூராட்சிகள், மருத்துவ காப்பீடு திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தோட்டக்கலைத் துறை, பள்ளி கல்வித்துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200 அலுவலர் களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி கமிஷனர் அனு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, பயிற்சி கலெக்டர் மாலதி, துணை மேயர் தாமரைச் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Aug-2025