மேலும் செய்திகள்
சிறு பாசன கணக்கெடுப்பு வருவாய்த்துறை தீவிரம்
18-Oct-2025
சிதம்பரம்: தமிழகம் முழுவதும் சிறுபாசனம் மற்றும் நீர்நிலை கணக்கெடுக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மத்திய நீர்வளத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், 7 வது சிறுபாசன கணக்கெடுப்பு மற்றும் 2வது நீர்நிலை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த காலங்களை விட தற்போது விவசாய போர்கள் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா மற்றும் குளம், குட்டை மற்றும் ஏரி ஆகிவற்றின் நிலை, அதனை எந்த துறையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது, அதன் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணிகள் துவங்குவதற்கு முன்பே, இதற்கென உள்ள மொபைல்போன் ஆப் மூலம், எப்படி பதிவு செய்வது என்பது குறித்து, புள்ளியியல் துறை சார்பில், தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ.,க்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் துவங்கி நடந்து வருகிறது. சிறுபாசனம் கணக்கெடுப்பு மூலம், அந்தந்த வி.ஏ.ஓ., விற்குட்பட்ட பகுதியில், இருக்கும் போர்கள் உள்ள இடத்திற்கு சென்று, செல்போனில் பதிவிரக்கம் செய்யப்பட்ட, 'ஆப்' மூலம் பதிவு செய்ய வேண்டும். அதில், சர்வே நம்பர், உரிமையாளரின் பெயர், போர் மூலம் உள்ள விவசாய பரப்பளவு, போர் எத்தனை அடி ஆழம் மற்றும் எந்த சைஸ் பைப் பயன்பாடு, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது, உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மொபைல்போன் ஆப் மூலம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல், நீர்பாசன கணக்கெடுப்பில், குளம், குட்டை, ஏரிகள் பஞ்சாத்து, பொதுப்பணி துறைக்கு சொந்தமானதா, அதன் பரப்பளவு, ஆக்கிரிமிப்பில் உள்ளதா, அதன் ஆழம் மற்றும் நீர் பிடிப்பின் கொள்ளவு, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு துார் வாரப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளிட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
18-Oct-2025