சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
புவனகிரி: புவனகிரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி, கூலிவேலை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உரிய ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்து, புவனகிரி பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது முராட்அலி,32, முகமது அப்துல்லா,28, முகமது ஆரிப் உசேன்,30, முகமது மினருல் ஹக்,18, முகமது ஷகில் அலி,20, முகமது ரோம்சன் அலி,20, முகமது மிராசுல் இஸ்லாம்,26, அவல் ஷேக்,22, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.