வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Jan 18 கடலூரில் ஆற்று திருவிழா நடக்கும் அதையும் சேர்த்து லீவு விட்டு விட்டார்கள் போல
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஜன., 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை 8 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.பொங்கல் அரசு விடுமுறையாக ஜன., 14 முதல் 16 வரை மூன்று நாட்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 17ம் தேதியும் அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து 18 மற்றும் 19 சனி, ஞாயிறு நாட்களாக உள்ளதால் தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஜன.,13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதாலும், 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பொங்கலை கொண்டாட 8 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
Jan 18 கடலூரில் ஆற்று திருவிழா நடக்கும் அதையும் சேர்த்து லீவு விட்டு விட்டார்கள் போல