உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் 8 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

கடலுார் மாவட்டத்தில் 8 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 8 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் 8 பி.டி.ஓ.,க்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மங்களூர் பி.டி.ஓ., (வட்டார ஊராட்சி) சண்முகாசிகாமணி, மங்களூர் (கிராம ஊராட்சி) பி.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த முருகன், மேல்புவனகிரிக்கும் (கி.ஊராட்சி), மேல்புவனகிரியில் பணிபுரிந்த பாலாமணி, கடலுார் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்திற்கும், கம்மாபுரம் (வ.ஊ) ஜெயக்குமாரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேப் போன்று, கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விஜயலட்சுமி, விருத்தாசலம் சங்கர், ஸ்ரீமுஷ்ணம் (வ.ஊ) செந்தில்வேல்முருகன், ஸ்ரீமுஷ்ணம் (கி.ஊ) வீராங்கன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை