உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவமனையில் 9 பேர் அட்மிட்

அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவமனையில் 9 பேர் அட்மிட்

கடலுார்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் அடைந்து வருகிறது. இரவு நேரங்களில் மழை, பகல் நேரங்களில் கடும் வெயில் தாக்கம், அனல் காற்று என வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.மழையால் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் சுகாதார சீர்கேடு காரணமாக கடலுார் மாவட்டம் முழுதும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தாத பிளாஸ்டி கழிவு, டயர், தேங்காய் சிருட்டை போன்றவைகளில் மழை நீர் தேங்குவதால் 'டெங்கு' கொசு உற்பத்தியாகி மாவட்டம் முழுவதும் பரவாலக காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.பல நாட்களுக்கு குறையாமல் கடும் ஜூரம், உடல் சோர்வு, வறட்சி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு வருகின்றனர்.கடுமையான காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 'பாசிட்டிவ் ரிசல்ட்' வருபவர்களை, அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தனி டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் 7 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 2 பேர் என 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் 23 பேர், சிதம்பரத்தில் 22, பண்ருட்டி 6, விருத்தாசலம் 5, திட்டக்குடி 2, குறிஞ்சிப்பாடி 6 என மொத்தம் 64 பேர் கடும் காய்ச்சலால் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர்.டெங்கு காய்ச்சல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை டெங்கு பரவுதலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ