உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவலர் தேர்வில் 9,222 பேர் பங்கேற்பு

காவலர் தேர்வில் 9,222 பேர் பங்கேற்பு

கடலுார்: கடலுாரில், 2ம் நிலை காவலர் தேர்வை, எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், 2ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் உள்ளிட்ட, 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் நடந்த தேர்வை, 7,610 ஆண்களும், 2744 பெண்களும் என மொத்தம் 10,354 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், நேற்று 9,221பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வில், 1133 பேர் 'ஆப்சன்ட்' ஆகினர். நேற்று காலை தேர்வு மையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மையத்திற்கு வந்த தேர்வர்களை தீவிரமாக சோதனை செய்து அனுமதித்தனர். கடலுாரில், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு பாதுகாப்பாகவும், எந்த வித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை