மேலும் செய்திகள்
சாலை விபத்து மூதாட்டி பலி
02-Nov-2024
சேத்தியாத்தோப்பு : பைக்கில் சென்ற வாலிபர், ஜல்லி மற்றும் மண் குவியலில் சிக்கி விழுந்து இறந்தார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநெல்லிக்கொல்லை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் சத்தியசீலன்,23; இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வடலுாரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். பின்னலுார் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது வடிகால் கட்டுமானப ்பணிக்காக சாலையில் கொட்டியிருந்த ஜல்லி மற்றும் மண் குவியலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைதுசம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் விரைந்து சென்று, சத்தியசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Nov-2024