உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அலப்பறையில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது வழக்கு

அலப்பறையில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது வழக்கு

விருத்தாசலம்: பஸ் நிலையத்தில் அலப்பறையில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ் டயருக்கு அடியில் படுத்தபடி தந்தையும், மகனும் மதுபோதையில் அலப்பறையில் ஈடுபட்டனர். மேலும், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில், சேலம், ஏற்காடு பன்னீர்செல்வம், அவரது மகன் நிர்மல்ராஜ் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெடர் சந்துரு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை