உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

கடலுார், : தீபாவளி பண்ட் சீட்டு தகராறில் வாலிபரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.பண்ருட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் சரண்ராஜ், 20. இவர், கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், 30, என்பவரிடம் தீபாவளி சீட்டு மாதம் ஆயிரம் ரூபாய் என 11 மாதம் செலுத்தினார்.இதையடுத்து, தீபாவளி பொருட்களை வெங்கடகிருஷ்ணன் கொடுக்காததை, சரண்ராஜ் கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் சரண்ராஜை, வெங்கடகிருஷ்ணன் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின்பேரில், வெங்கடகிருஷ்ணன் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை