உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடகள போட்டிகளில் அசத்தும் மாற்றுத்திறன் மாணவர்

தடகள போட்டிகளில் அசத்தும் மாற்றுத்திறன் மாணவர்

கடலுார்; பண்ருட்டி அடுத்த விழமங்கலத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மாணவர் கார்த்திக், 23. தனியார் கல்லுாரியில் முதுகலை இரண்டாமாண்டு கணிதம் படிக்கிறார். பள்ளிக்காலம் முதலேஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகிறார். 2023ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக மண்ட விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். ஊட்டியில் நடந்த தமிழ்நாடு அளவிலான காதுகேளாதோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இந்துாரில் நடந்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தடைதாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.2024, டிசம்பரில் மலேசியாவில் நடந்த ஆசிய பசுபிக் காது கேளாதோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பெற்றோர் மகாலிங்கம், விஜி மற்றும் பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர். தொடர்ந்து ஜப்பான், டோக்கியாவில் நடக்க உள்ள காதுகாளோதோருக்கான சர்வதேச போட்டியான டிப்லிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை