உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் முந்திரி பயிர் வியபாரித்தில்  ரூ.54 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி கைது 

பண்ருட்டியில் முந்திரி பயிர் வியபாரித்தில்  ரூ.54 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமி கைது 

கடலுார்: பண்ருட்டியில் முந்திரி பயிர் வியபாரத்தில் ரூ.54 லட்சம் மோசடி செய்த பலே முந்திரி வியபாரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டைச் சேர்ந்த சேதுராமன் மனைவி குமாரி 47; இவர் தனது பெயரில் அரசு அங்கீகாரம், லைசன்ஸ் பெற்று முந்திரி கம்பெனி வைத்துள்ளார். சாத்திப்பட்டைச் சேர்ந்த அருள்சாமி மகன் ஆரோக்கியசாமி, 51; முந்திரி வியபாரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரோக்கியசாமி, மகள் வினோலியா, மகன் ஆனந்தராயர், மனைவி ரெஜினசமேரி ஆகியோர் சேர்ந்து குமாரியிடம் இருந்து முந்திரி பயிர் வாங்கி வியபாரம் செய்தனர். அந்த வகையில் ரூ.28 லட்சம் பாக்கி தரவேண்டி இருந்தது. இதனை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். குமாரி பல முறை கேட்டதால், ஆரோக்கியசாமி ரூ. 28 லட்சத்திற்கு வங்கி காசோலை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது, ஆரோக்கியசாமி வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திருப்பியது. பின்னர் விசாரணையில் ஆரோக்கியசாமி, அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன், அன்பரசன், இளங்கோவன், சீனிவாசன், பழனி, வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து ரூ.26 லட்சம் ஏமாற்றியதும், முந்திரி பயிர் வியபாரம் செய்த வகையில் முந்திரி வியபாரிகளிடம் இருந்து மொத்தம் ரூ.54 லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.இது குறித்து குமாரி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி., ஜெயக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, எஸ்.ஐ., லிடியா ஆகியோர் ரூ.54 லட்சம் மோசடி செய்த ஆரோக்கியசாமி மீது வழக்குப் பதிந்து அவரைது கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை