மேலும் செய்திகள்
ஏழு ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா பூங்கா
15-Sep-2024
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிக்குட்பட்ட மாருதி நகர், எஸ்.எல்.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல லட்சம் செலவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. மாருதி நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 25 லட்சம் செலவில் சுற்றுசுவருடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்தனர். அங்கு, ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட சிறுவர்கள் விளையாட உபகரணங்களை பொறுத்தினர். சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பயன்படுத்தி மகிழ்ச்சியாக விளையாடி வந்தனர்.பெரியவர்களும் மாலை நேரத்தில் நடை பயிற்சி செல்வதற்கும், மகிழ்சசியாக பொழுதை கழிக்கவும் இங்கு வந்து சென்றனர். பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்த விளையாட்டு திடல், ஒரு சில மாதங்களிலேயே விளையாட்டு உபகரணங்கள் வீணாகியதால், மைதானம் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. நகராட்சியும் கண்டுகொள்ளாததால், அந்த இடம் தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.நெல்லிக்குப்பத்தில் நகராட்சி சேர்மன் வீட்டு அருகிலேயே உள்ள இந்த விளையாட்டு பயன்படாமல் வீணாகியது குறித்து சேர்மனோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாதது, பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
15-Sep-2024