உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசை தாக்கிவிட்டு ஓடிய ரவுடிக்கு எலும்பு முறிந்தது

போலீசை தாக்கிவிட்டு ஓடிய ரவுடிக்கு எலும்பு முறிந்தது

கடலுார்; நெய்வேலியில் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி தவறி விழுந்ததில், கை, கால் எலும்பு முறிந்தது.நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சுபாஷ்சந்திரபோஸ்,26; பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவரை கஞ்சா வழக்கில் நெய்வேலி ெதர்மல் போலீசார் தேடிவந்தனர்.இந்நிலையில் அவர், வாட்டர் டேங்க் அருகே பதுங்கி இருக்கும் தகவலை அறிந்த தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் திவாஸ் மற்றும் போலீசார் சரண்ராஜ், ராமராஜன் ஆகியோர் விரைந்து சென்று, சுபாஷ்சந்திரபோஸை பிடிக்க முயன்றனர். உடன் அவர், போலீஸ்காரர் சரண்ராஜை ஆபாசமாக திட்டி, கீழே தள்ளிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டியபடி தப்பி ஓடியபோது தவறி விழுந்தார். அதில், அவரது கால் மற்றும் கை எலும்பு முறிந்தது.உடன் போலீசார் அவரை கைது செய்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் பதுங்கியிருந்த இரு சிறார்கள், கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ