பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி இறந்தார்
நெல்லிக்குப்பம் : பைக்கில் சென்ற வாலிபர், பாலத்தில் மோதி, வாய்க்கால் பள்ளத்தில் விழுந்து இறந்தார்.பண்ருட்டி, திருவதிகையை சேர்ந்தவர் முருகன்,43; இவர் கடலுார், சாவடியில் கஸ்டம்ஸ் சாலையில் உள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். கஸ்டம்ஸ் சாலை வழியாக நத்தப்பட்டு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் இருந்த பாலத்தின் மீது மோதியது.அதில் வீசப்பட்ட முருகன், அருகில் இருந்த 15 அடி ஆழ வாய்க்கால் பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்தார். அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.