மேலும் செய்திகள்
ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
29-Sep-2024
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில், போக்குவரத்து போலீசார் மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மந்தாரக்குப்பம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதில் மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வடக்குவெள்ளுர் இணைப்பு சாலை வழியாக இரண்டாம் சுரங்கத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கு கனரக வாகனங் கள், பஸ், லாரி, உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.இந்த பகுதியில் எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் கடலுார் -சேலம் தேசிய நெடுஞ்சாலை வடக்குவெள்ளுர் இணைப்பு சாலை பகுதியில் விருத்தாசலத்திலிருந்து கடலுார் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து போக்குவரத்து போலீசாரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29-Sep-2024