உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது பஸ் மோதி விபத்து வாலிபர் பலி: இருவர் காயம்

பைக் மீது பஸ் மோதி விபத்து வாலிபர் பலி: இருவர் காயம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தனியார் கல்லுாரி பஸ் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தஞ்சேரியை சேர்ந்தவர்கள் சரவணன் மகன் சரண்ராஜ், 24, ரமேஷ் மகன் ரகு, 24, மாசிலாமணி மகன் பிரதீப்குமார், 23. நண்பர்களான மூவரும் ஹீரோ பைக்கில் நேற்று மாலை 6:00 மணியளவில், கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.தேவங்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் உள்ள தனியார் கல்லுாரி பஸ், பைக் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த சரண்ராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகு, பிரதீப்குமார் காயமடைந்தனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை