மேலும் செய்திகள்
நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு
23-Jan-2025
பண்ருட்டி: வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை செட்டிப்பட்டறை மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கார்த்திகா,10; இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 25 நாட்களாக வயிற்றுவலி அதிகமாக இருந்தது. இதற்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்த கார்த்திகாவிற்கு நேற்று முன்தினம் இரவு வலிப்பு ஏற்பட்டது.உடன் அவரை, அவரது பெற்றோர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டததை உறுதி செய்தார்.இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Jan-2025