உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் குடிநீர் பைப் சரி செய்ய தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்துகள் நடக்கின்றன. நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் பஸ் நிறுத்தம் அருகே நகராட்சியின் குடிநீர் பைப்பில் கடந்த 45 நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய நகராட்சி மூலம் பள்ளம் தோண்டி குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பை சரி செய்தனர். ஆனால், அதன்பிறகு பெயரளவுக்கு மட்டுமே பள்ளத்தை மூடினர். அங்கு மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதன்மீது பெரிய கருங்கல்லை வைத்தனர். இந்த இடம் கடலுார் - பண்ருட்டி பிரதான சாலையில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பள்ளத்தை நிரந்தரமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண் டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை