உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, ரோட்டரி சங்கம் சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர் பரமசிவம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுபஸ்ரீ, அந்தோணி மேரி வரவேற்றனர். முன்னாள் துணை ஆளுநர் அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் சங்கர் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிலைய அலுவலர் (போக்குவரத்து) பன்னீர்செல்வம், சிறப்பு நிலை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். செயலாளர் லாவா குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை