மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
26-Oct-2024
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் அரசு உதவி பெறும் கணபதி பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி மற்றும் பருவமழை பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னணி தீயணைப்பு வீரர் அசோக்குமார், தீயணைப்பு வீரர்கள் செல்வம், லிங்கேஸ்வர், புஷ்பராஜ் ஆகியோர் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை செய்து காண்பித்தனர்.மேலும், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழைவெள்ளம், புயல் காற்று ஆகியவைகள் ஏற்படும்போது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீ தடுப்பு உபகரணங்கள், பேரிடர் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு எவ்வாறு மக்கள் பேரிடரில் காத்துகொள்ள வேண்டும் என விளக்கம் அளித்தனர்.
26-Oct-2024