மேலும் செய்திகள்
சென்டர் மீடியனில் போஸ்டர் அகற்ற நடவடிக்கை தேவை
31-May-2025
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் சாலையில் ஏராளமான குறுக்கு சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பின் மந்தாரக்குப்பம், குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை 5 கி.மீ., துாரத்திற்கு சென்டர் மீடியாவுடன் வடிகால் வசதி அமைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்டர் மீடியனில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குறுக்கு சாலை அமைக்கப்பட்டது.ஆனால் இப்பகுதி மக்கள் கடை, வீடுகளுக்கு சென்டர் மீடியாவை சுற்றி செல்ல சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சென்டர் மீடியன் வழியாக வாகனங்கள் செல்ல ஏதுவாக பல்வேறு இடங்களில் தடுப்பு சுவரை இடித்து வழியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் திடீரென குறுக்கு சாலையில் திரும்பவதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் அடிக்கடி சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே விபத்துகளை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
31-May-2025