உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் சாதனை

நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் சாதனை

நெய்வேலி : திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் சாதனை படைத்த நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்களை என்.எல்.சி., சேர்மன் பாராட்டினார். கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நெய்வேலியில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், என்.எல்.சி., இந்தியா நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப்பள்ளியின் (சி.பி.எஸ்.இ) 5 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள், திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் ஒப்பித்து சாதனை படைத்தனர். இவர்களுக்கு தமிழக அரசு சா ர்பில் தலா 15,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. சாதனை மாணவர்களுக்கு என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை