சென்டர் மீடியனில் போஸ்டர் அகற்ற நடவடிக்கை தேவை
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதி சென்டர் மீடியன்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டி கொண்டு போஸ்டர் ஒட்டுவதால் விபத்து அபாயம் உள்ளது. கடலுார் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் மந்தாரக்குப்பம் பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சென்டர் மீடியன்களில் இரு பகுதிகளிலும் அரசியல் கட்சி போஸ்டர்கள், கட்சி விளம்பரங்கள் எழுதி வருவது அதிகரித்து வருகிறது.இதனால், வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்டர் மீடியனில் கருப்பு, வெள்ளை பெயிண்டை மறைத்து விட்டு அரசியில் கட்சியினர் விளம்பரங்கள் எழுதுவதால் அரசின் நிதி வீணாகிறது. எனவே, போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.