உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய கிராமங்களில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி பணிகளான சாலை, குடிநீர், வீடு கட்டும் திட்டம், நுாறுநாள் வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியில் நுாலகத்தையும் ஆய்வு செய்தார். ஊராட்சி செயலாளர்கள் அருள்ஜோசப், கலையரசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !