உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரத்துாரில் அ.தி.மு.க., கூட்டம்

ஒரத்துாரில் அ.தி.மு.க., கூட்டம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரில், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சாபில் அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ராமராஜேந்திரன் துவக்க உரையாற்றினார்.ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, சிவப்பிரகாசம், சீனிவாசன், நவநீதக்கிருஷ்ணன், சின்னரகுராமன், நகர செயலாளர்கள் செல்வக்குமார், மணிகண்டன், மனோகரன், மேனகாவிஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் வள்ளிதில்லைமணி, சுமதிகருப்பன், கவிதாக மலக்கண்ணன், செல்வி,சத்தியாவைரமணி, ராஜலட்சுமிராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.தலைமைக்கழக பேச்சாளர்கள் நடராஜன், பாஸ்கரன் பேசினர். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முருகுமணி, பேரவை துணை செயலாளர் அருளழகன், வர்த்தக அணி சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி