உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

வேப்பூர்,: நல்லுார் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூரில் நடந்தது.கூட்டத்திற்கு, நல்லுார் அ.தி.மு.க., ஒன்றிய அவை தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை மாநில துணை செயலர் அருளழகன், வர்த்தக அணி மாநில துணை செயலர் சக்திவேல், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.நல்லுார் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பச்சமுத்து வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் மோகன், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அ.தி.மு.க., மாவட்ட அவை தலைவர் தங்கராசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலர் அருண், மங்கலம்பேட்டை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பாஸ்கரன், வேப்பூர் கிளை செயலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., நிர்வாகிகளின் செயல்பாடுகள், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை