மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
25-Sep-2024
திட்டக்குடி : திட்டக்குடியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கட்சியின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் தி.மு.க., அரசின் பொய் வாக்குறுதிகள் குறித்து பேசினார். நகர செயலாளர் நீதிமன்னன் வரவேற்றார். கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரவிமரியா, ஜெ., பேரவை துணைச் செயலாளர் சிவசுப்ரமணியன், ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் அருளழகன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், பாண்டியன், ராஜேந்திரன், பச்சமுத்து, பெண்ணாடம் நகர செயலாளர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல பொறுப்பாளர் முல்லைநாதன் நன்றி கூறினார்.
25-Sep-2024