விருத்தாசலத்தில் த.வெ.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், விருத்தாசலம் சட்டசபை தொகுதி த.வெ.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலர் விஜய் தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர பொறுப்பாளர் அப்பாஸ் அலி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலர் சங்கர், துணை செயலர்கள் வாசு, விருத்தாம்பாள் சதாசிவம், ஒன்றிய பொறுப்பாளர்கள் பிரபு, செல்வமணி, வினோத், சிவா, அப்பு, வெற்றிவேல், ரஞ்சித் மற்றும் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வாக்குச்சாவடி வாரியாக கட்சியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை கட்சியில் சேர்த்து, உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.வாக்களர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும். வரும் 22ம் தேதி கட்சி தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ரத்ததானம் வழங்கி, அனைத்து கிளைகளிலும் விமர்சையாக கொண்டாட வேண்டும்.மாவட்ட செயலர் ராஜசேகரை, தலைமை நிலைய செயலராக நியமனம் செய்த தலைவர், பொதுச்செயலருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர நிர்வாகிகள் பிரசாந்த், ராஜ்குமார் நன்றி கூறினர்.