உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

 குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

மந்தாரக்குப்பம்: கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக, பெய்து வரும் மழையால் பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி, உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நோய் தொற்று பரவாமல் தடுக்க 'மாஸ்க்' அணிந்து செல்வது அவசியம்; காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; வீடுகளை சுற்றிலும் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்; காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்; தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; என சுகாதாரத்துறை சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ