உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், தனியார் மண்டபத்தில் நடந்தது. சி.இ.ஓ., எல்லப்பன் தலைமை தாங்கினார். டி.இ.ஓ., துரைப்பாண்டியன், தனியார் பள்ளி டி.இ.ஓ., மோகன், தொடக்கக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தனர். தேர்வு துறை இயக்குனர் லதா, பிளஸ் 2 அரசு தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் தந்த தலைமை ஆசிரியர்களை பாராட்டினார். நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், விருத்தாசல ம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 71 அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை