உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முகவர் சங்கம் இனிப்பு வழங்கல்

முகவர் சங்கம் இனிப்பு வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் எல்.ஐ.சி., அலுவலகம் முன், லியாபி முகவர் சங்கத்தினர், இன்ஷூரன்ஸ் பிரீமியத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்று, பட்டாசு வெடித்து, கொண்டாடினர். சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஜானகிராமன் முன்னிலை வகித்தார். அகில இந்திய நிதி குழு தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, முகவர் சங்கத்தின் நன்மை குறித்து பேசினார். செயலாளர் செல்வம், நிர்வாகிகள் கனகசபை, கரு ணாநிதி, கோவிந்தராஜ், சசிக்குமார், ஆறுமுகம், ஜெயபால், ரவிச்சந்திரன், சண்முகம், எத்திராஜ், பரமசிவம், மாயவேல், பெரியசாமி, சந்திரகலா, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் தவமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை