மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிர் திட்டங்கள் பிரசாரம்
02-Jun-2025
பெண்ணாடம்:பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் வேளாண்மை துறை சார்பில், வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம் நடந்தது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சென்னை வேளாண்துறை விஞ்ஞானி சிவா, வேளாண் பேராசிரியர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர். நல்லுார் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் கீதா வரவேற்றார். விகடகவி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் ராமச்சந்திரன், பேரூராட்சி உறுப்பினர் சண்முக ப்ரியா, முன்னோடி விவசாயிகள் அர்ச்சுணன், சண்முகம், இயற்கை விவசாயி முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசின் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் வேளாண்மை துறை சார்ந்த வளர்ச்சிக்கான பிரசார இயக்க திட்டத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சாந்தி என்பவரது வயலில் ஒருங்கிணைந்த நெல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 'ட்ரோன்' மூலம் நெற்பயிருக்கு உரம் தெளித்தல் செயல்முறை விளக்கம் நடந்தது.
02-Jun-2025