வேளாண் அடுக்ககம் திட்ட பயிற்சி முகாம்
சிதம்பரம்; குமராட்சி வட்டாரத்தில் வேளாண் அலுவலகத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி அலுவலர்களுக்கு, கணக்கெடுப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.குமராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,சரவணன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். பயிற்சியில் வேளாண் அலுவலர்கள், தரவுகள் சேகரிக்கும் பணி அலுவலர்கள் பங்கேற்றனர்.