உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

குள்ளஞ்சாவடி: மழையால் பாதிப்படைந்த வயல்களை வேளாண் உதவி இயக்குனர் பார்வையிட்டார்குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் தொடர் மழையால் நெற்பயிர்கள், பன்னீர் கரும்பு, வேர்க்கடலை வயல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேய்க்காநத்தம் கிராமத்தில், 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் நீரில் மூழ்கியது. குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதிகளில் 850 ஏக்கர் பன்னீர் கரும்புகள் சாய்ந்தன. சமீபத்தில் வேர்க்கடலை விதைக்கப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி, முற்றிலும் சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பயிர்களை குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன் நேரில் ஆய்வு செய்தார். தம்பிப்பேட்டைபாளையம் ஊராட்சி தலைவர் தேன்மொழி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ