உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவர்கள் பேரளையூரில் மதிப்பீடு

வேளாண் மாணவர்கள் பேரளையூரில் மதிப்பீடு

விருத்தாசலம்: பேரளையூர் கிராமத்தில் வேளாண் மாணவர்கள் சார்பில், கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி அடுத்த சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பேரளையூர் கிராமத்தில் வேளாண் மாணவர்கள் சார்பில், கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி நடந்தது. இதில், கருவேப்பிலங்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் கலைச்செல்வி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், இயக்க வரைபடம், பிரச்னை மரம், காலவரிசை வரைபடம் உள்ளிட்ட கருவிகள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடுகள் குறித்து கிராம மக்களுக்கு, மாணவர்கள் விளக்கினர். மேலும், கிராமத்தின் முக்கிய பிரச்னைகள், உள்ளூர் வளங்கள் மற்றும் கடந்த காலங்களில் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவசாயிகளுடன், கலந்துரையாடி தகவல்களை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !